politics

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.24ல் தொடக்கம்

டெல்லி: அக்டோபர் 17ல் நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்.24 முதல் 30 வரை நடைபெறும் என அறிவித்தது. அக்டோபர் 17ல் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. Source link

அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன்

சென்னை: அதிமுக அலுவலக கலவர வழக்கு தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இன்று ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. Source link

திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது

சென்னை: திமுகவின் உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. மாவட்ட செயலாளர், அவை தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 25ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. Source link

இலங்கை கடற்படையினரின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: இலங்கை கடற்படையினரின் அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். தமாகா தலைவர் ஜி.கே. வாசன்  அறிக்கை: மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு தொடந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இலங்கை கடற்படையினரின் அராஜக போக்கு மிகவும் கண்டிக்கதக்கது. மத்திய மாநில அரசுகள்; மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்து, இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடராமல் தடுக்க வேண்டும். Source link

சொல்லிட்டாங்க…

* கேரள கவர்னர் முகமது ஆரிப் கானின் அலுவலகம் அரசியல் சூழ்ச்சி மையமாக மாறி வருகிறது. – கேரள முதல்வர் பினராயி விஜயன்* அனைத்து துறைகளின் வீழ்ச்சிக்கு நாட்டை ஆளும் பாஜ அரசின் சகிப்பின்மை, பிரிவினைவாதம், வெறுப்பு அரசியல் தான் காரணம். – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.* 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்கட்சிகளையும் ஒன்றிணைப்பதில் மட்டுமே நான் ஆர்வமாக இருக்கிறேன்.  – பீகார் முதல்வர் நிதிஷ்குமார் * தேசிய நன்மைக்காக வரும் …

சொல்லிட்டாங்க… Read More »

மாற்றுத்திறனாளி பேட்மிட்டனில் 6 தங்கங்களை குவித்த மாணவிக்கு டிடிவி.தினகரன் பாராட்டு

சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தாய்லாந்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மிண்டனில் பல்வேறு பிரிவுகளில் 6 தங்கங்களைக் குவித்து சாதனை புரிந்திருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணவி ஜெர்லின் அனிகாவுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேட்மின்டனில் இன்னும் பல உயரங்களை அவர் எட்டிப்பிடித்து தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link

மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு: வைகோ இரங்கல்

சென்னை:  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளரும், புகாரி ஓட்டல் குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவருமான முராத் புகாரி மறைந்தார். கட்சியின் ஆணிவேர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்களின் இப்தார் நிகழ்ச்சியை எந்தக் கட்சியிலும் நடத்தாத அளவுக்கு, ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கெடுக்கின்ற நிகழ்ச்சியாக நடத்தி வந்தார். மதிமுகவால் 3 நாட்கள் இந்தத் துக்கம் கடைபிடிக்கப்படும். ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படும். 24ம்தேதி அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு …

மதிமுக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு: வைகோ இரங்கல் Read More »

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தார்

சென்னை: ஜூன் 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக் குழு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும், எம்பியுமான சி.வி.சண்முகம் தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று புதிய மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘‘அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் கட்சி விதிகளை திருத்தியது ஆகியவைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிமுக முன்னாள் …

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்க கோரி தேர்தல் ஆணையத்தில் மனு: மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்தார் Read More »

டெல்லியில் இருந்து மனச்சோர்வுடன் சேலம் திரும்பினார் அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?.. பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பேச்சுவார்த்தை திருப்தி தராதநிலையில் மிகுந்த மனச்சோர்வுடன் சேலம் திரும்பியுள்ளார். அவர் என்ன பேசினார் என்பது குறித்து அதிமுகவினர் புதுத்தகவலை தெரிவித்து வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடந்த திங்கட்கிழமை அவசரம் அவசரமாக டெல்லி சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டிருந்த நிலையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக …

டெல்லியில் இருந்து மனச்சோர்வுடன் சேலம் திரும்பினார் அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?.. பரபரப்பு தகவல்கள் Read More »

தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பாஜ தேசிய தலைவர் இன்று வருகிறார்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

சென்னை: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜ தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்நிலையில், 2 நாட்கள் பயணமாக அவர் இன்று காலை தமிழகம் வருகிறார். மதுரை வரும் அவர் பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக காலை 11 மணி அளவில் மதுரை விமானம் நிலையம் வருகிறார். அவருக்கு பாஜவினர் வரவேற்பு அளிக்கின்றனர். மதுரை …

தமிழகத்துக்கு இரண்டு நாள் பயணமாக பாஜ தேசிய தலைவர் இன்று வருகிறார்: நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை Read More »