பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடி வசூலை நெருங்கும் பிரம்மாஸ்திரம்: நிம்மதி பெருமூச்சு விடும் பாலிவுட் | Ranbir Kapoor starrer Brahmastra has reached the Rs 100 crore mark
நம்பிக்கை கொடுத்த பிரம்மாஸ்திரம் கொரோனாவுக்குப் பிறகு இந்தியில் வெளியான திரைப்படங்கள், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ‘காஷ்மீர் ஃபைல்’ தவிர மற்ற படங்கள் எல்லாம், மிகப் பெரிய தோல்வியைத் தழுவின. மேலும், வசூலிலும் மிக மோசமான அடிவாங்கி, பெருத்த நஷ்டத்தை கொடுத்தது. இதனால், பாலிவுட் நட்சத்திரங்கள் கதிகலங்கி நின்றனர். அவர்களுக்கு எதிராக நெட்டிசன்கள் தொடர்ந்து பாய்காட் செய்துவந்தது, நிலைமையை இன்னும் மோசமாக்கியது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை (செப் 9) வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. …