India

டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர் உள்ளிட்டோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை

டெல்லி: டெல்லியில் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குநர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், ஒன்றிய உள்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 100 பேரை என்ஐஏ கைது செய்துள்ள நிலையில் ஆலிசனை மேற்கொண்டுள்ளார். Source link

உத்திரபிரதேசத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் பலி: 2 பேர் படுகாயம்

லக்னோ: உத்திரபிரதேசத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் பலியாகிய நிலையில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உத்திரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் காரணமாக பல்வேறு இடங்களில் பல்வேறு விபத்துகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் எடாவா மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய குழந்தை …

உத்திரபிரதேசத்தில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 4 சிறுவர்கள் பலி: 2 பேர் படுகாயம் Read More »

கர்நாடகாவில் பிஎப்ஐ, எஸ்டிபிஐ அமைப்பு அலுவலகங்கள் உள்பட 30 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கர்நாடகா: கர்நாடகாவில் பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பு அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. என்ஐஏ அதிகாரிகள் நள்ளிரவு முதல் மேற்கொன்டு வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூரு, தக்ஷினா கன்னடா, கொப்பல், உத்தர கன்னடா, சிமோகா உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெறும் சோதனையில் மாநிலம் முழுவதும் எஸ்டிபிஐ  மற்றும் பிஎப்ஐ  அமைப்பை சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.    Source link

பெங்களூரு- ஒசூர் சிறப்பு ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கம்

பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்த்பூர்- ஒசூர் சிறப்பு ரயில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. காலை 6.10 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் 7.50 மணிக்கு ஒசூர் வந்தடைந்தது.   Source link

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,443 பேருக்கு கொரோனா பாதிப்பு; 5,291 பேர் டிஸ்சார்ஜ்: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..!

டெல்லி: உலகம் முழுதும் பேரழிவை உண்டாக்கிய கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த சில காலமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,443 ஆக பதிவாகியுள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,342 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,291 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,429 பேர் …

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,443 பேருக்கு கொரோனா பாதிப்பு; 5,291 பேர் டிஸ்சார்ஜ்: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை..! Read More »

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி

எர்ணாகுள: கேரள மாநிலம் எர்ணாகுணத்தில் தனது 15 வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தொடங்கினார். எர்ணாகுளம், தேசோம் பகுதியில் பயணத்தை தொடங்கி சாலக்குடியில் நிறைவு செய்கிறார். Source link

குஜராத்தில் ஓராண்டில் ரூ.6,500 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

சூரத்: குஜராத் மாநிலத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.6,500 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 750 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளது. Source link

லாரி மோதி விபத்து; சாலை தடுப்பில் தூங்கிய 4 பேர் பலி: டெல்லியில் பரிதாபம்

புதுடெல்லி: டெல்லியில் சீமாபுரியில் சாலை தடுப்பில் படுத்து தூங்கியவர்கள் மீது லாரி மோதியதில் 4 பேர் பலியானார்கள். டெல்லியின் சீமாபுரி பகுதியில் சாலை டிவைடரில் சிலர் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு வேகமாக வந்த லாரி ஒன்று தடுப்பில் மோதியுள்ளது. இந்த விபத்தில் தடுப்பில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் காயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு …

லாரி மோதி விபத்து; சாலை தடுப்பில் தூங்கிய 4 பேர் பலி: டெல்லியில் பரிதாபம் Read More »

மிஸ்திரி கார் விபத்து; பின் சீட் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்: வரைவு விதிமுறை வெளியீடு

புதுடெல்லி: காரின் பின் சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மும்பையில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.  காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால்தான் உயிரிழக்க நேரிட்டது என தெரியவந்தது.  காரின் பின் சீட்டில் அமர்ந்து பிரயாணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் இனி அபராதம் விதிக்கப்படும் என  ஒன்றிய போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி  எச்சரிக்கை …

மிஸ்திரி கார் விபத்து; பின் சீட் பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்: வரைவு விதிமுறை வெளியீடு Read More »

பிஎம் கேர்ஸ் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம்

புதுடெல்லி: பிஎம் கேர்ஸ் நிதிய அறங்காவலராக  பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கொரோனா  பரவல் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, கடந்த 2020ம் ஆண்டு  பிரதமர் மோடி பிஎம் கேர்ஸ் என்ற நிதியத்தை ெதாடங்கினார். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள், நன்கொடைகள் அளித்து வருகிறார்கள். பிஎம் கேர்ஸ் மூலம் இதுவரை கொரோனாவில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வென்டிலேட்டர்கள், மருத்துவக்  கருவிகள், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் என ஏராளமான  உதவிகள் …

பிஎம் கேர்ஸ் அறங்காவலராக ரத்தன் டாடா நியமனம் Read More »