உலக வரைபடத்தில் இருந்து உக்ரைனை நீக்கி விட ரஷ்யா முயற்சி: ஐநா பொதுச்சபையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றச்சாட்டு
வாஷிங்டன்: உலக வரைபடத்தில் இருந்து இறையாண்மை நாடான உக்ரைனை நீக்கி விட ரஷ்யா முயற்சி எடுப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் 77வது கூட்டத்தில் பேசிய அவர், அண்டை நாட்டினர் மீது ரஷ்யா போர் தொடுத்தது வெட்ககேடான செயல் என்று விமர்சித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முக்கிய கொள்கைகளை ரஷ்யா மீறியதாக பைடன் குற்றம்சாட்டினார். உக்ரைனை கைப்பற்ற ராணுவத்தில் பழைய வீரர்களை சேர்க்க ரஷ்யா அழைப்பு விடுப்பதாக பைடன் குற்றம்சாட்டினார். ரஷ்யாவின் …