ஒரே ராக்கெட்டில் 22 செயற்கைகோள்: சீனா சாதனை


பீஜிங்: ஒரே ராக்கெட் மூலம் 22 செயற்கைகோளை விண்ணில் செலுத்தி சீனா சாதனை படைத்துள்ளது. சீனா சமீபகாலமாக விண்வெளி ஆய்வில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு கட்டங்களில் விண்வெளிக்கு செயற்கைகோள்கள் அனுப்பும் நடவடிக்கைகளை அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையம் செயல்படுத்தி வருகிறது. கடந்த 2015 ம் ஆண்டு முதல் ‘லாங் மார்ச் ராக்கெட்’ என்ற செயற்கைகோள் ஏவுதல் வாகனங்களை அந்த நாடு பயன்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, லாங் மார்ச்- 8 என்ற நவீன வகை ராக்கெட்டை நேற்று விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது.

தெற்கு சீனா, ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை 11.06 மணிக்கு 22 செயற்கைகோள்களுடன் இந்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வணிக சேவைகள், கடல் சுற்றுசூழல் கண்காணிப்பு, காட்டுத்தீ தடுப்பு ஆகிய பணிகளை இந்த செயற்கைகோள் கண்காணித்து தகவல்கள் அனுப்பும். மேலும், விண்ணில் இருந்து புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பப்படும் பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரே ராக்கெட் மூலம் அதிக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்திய சாதனையை தற்போது சீனா படைத்துள்ளது.



Source link

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this: